undefined

 

அதிர்ச்சி... இரவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவி அதிகாலை மரணம்?! போலீசார் விசாரணை!

 

இரவில் ஆன்லைன் மூலமாக நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்ட 11ம் வகுப்பு மாணவி அதிகாலையில் உயிரிழந்த நிலையில், போலீசார் மர்ம மரணமாக வழக்குப்பதிவு செய்து மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரியமங்கலம், கீழ அம்பிகாபரத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில். ரயில்வே துறையில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவரது மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (16). திருச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்த ஸ்டெபி ஜாக்லினுக்கு நூடுல்ஸ் அதிகளவில் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. 

அடிக்கடி நூடுல்ஸ் ஆர்டர் செய்து சாப்பிடும் பழக்கமுடைய ஸ்டெபி வழக்கம்போல் நேற்றும் ஆன்லைன் மூலமாக நூடுல்ஸ் ஆர்டர் செய்து இரவு சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், இன்று காலை தனது மகள் ஸ்டெபியை எழுப்ப ஜூடி முயற்சித்த போது ஸ்டெபி எழவில்லை. அதன் பின்னரே ஸ்டெபி உயிரிழந்தது குடும்பத்தாருக்கு தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெபியின் இறுதி சடங்குகளுக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் ஏற்பாடு செய்து வந்த நிலையில், மாணவி ஸ்டெபியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அரியமங்கலம் போலீசார் ஸ்டெபியின் வீட்டிற்குச் சென்று ஸ்டெபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முயன்றபோது, ஸ்டெபியின் உறவினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், தங்களுக்கு புகார் வந்துள்ளதாகவும், அதனடிப்படையில் ஸ்டெபியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பிறகு தான் தர முடியும் என்று கூறிய போலீசார், ஸ்டெபியின் உடலை திருச்சி அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அன்றைய தினம் மாலையில் உடல் மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் மரணத்திற்கான காரணம் மர்மமாக உள்ள நிலையில், ஸ்டெபியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா