undefined

அதிர்ச்சி... 10ம் வகுப்பு மாணவி தற்கொலை... போலீசார் விசாரணை!

 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமங்கலைச் சேர்ந்தவர் தேவராஜ். இருடைய 15 வயது மகள் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

இது குறித்து தகவல் அறிந்து பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!