அதிர்ச்சி.. ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான நகை, பணம்!

 

திருச்சி ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே போலீஸார் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். லட்சுமணன் (வயது 25) பையை சோதனை செய்தபோது அதில் தங்க நகை மற்றும் பணம் இருந்தது. இந்த பணம் மற்றும் நகைகள் குறித்து லட்சுமணனிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை ரெயில் நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது நகை, பணம் சென்னையில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறினார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பணத் தொகை ரூ. 15 லட்சம் மற்றும் ரூ.1 கோடியே 89 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 2.45 கிலோ தங்க நகைகள். இதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து (62 ஆயிரம்) என தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் பணம் வரி ஏய்ப்பு செய்ததா அல்லது ஹவாலா பணமா, இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!