undefined

அதிர்ச்சி.. பழம்பெரும் கோவிலில் வெடிகுண்டு வீச்சு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!

 

புதுச்சேரி சிவன் கோவில் சுவரில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஒருபுறம் கஞ்சா, மறுபுறம் வெடிகுண்டு கலாச்சாரம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், பாகூரில் உள்ள பழமையான மூலநாதர் சிவன் கோவிலின் பின்புற சுவரில் ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியது. இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், ஒரு வாலிபர் கோவில் சுவரில் வெடிகுண்டை வீசிவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்து கைதட்டினர். வெடிகுண்டு வீசும் கும்பலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜெயில் வார்டன் துணையாக இருப்பதாகவும் , அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் பதிவிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவிலில் வெடிகுண்டு வீசப்பட்ட வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாகூர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!