undefined

அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்.. கதறும் இளம்பெண்!

 

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அரவட்லா பகுதியைச் சேர்ந்த சின்னு கோவிந்தன் தம்பதிக்கு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை திருடப்பட்டதாக புகார் எழுந்தது. கடந்த 27ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சின்னு என்ற பெண்ணுக்கு, 27ம் தேதி இரவு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சின்னுவுடன் குழந்தையை குழந்தைகள் நல வார்டுக்கு மாற்றினர்.

இந்நிலையில், காலை 9 மணியளவில் சின்னுவின் கணவர் உணவு வாங்கிக் கொண்டு வார்டில் இருந்து வெளியே சென்றபோது, ​​சின்னு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தை கதறி அழுததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அங்கு வந்து குழந்தையை பார்த்துக் கொள்வதாக கூறி சின்னுவிடம் இருந்து குழந்தையை கடத்தி சென்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், குழந்தை கடத்தல் குறித்து மேலும் தெரியவர, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!