அதிர்ச்சி... வெடித்து சிதறிய பலூன் ... பிறந்த நாள் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் படுகாயம்!!
கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூரில் உள்ள பெலத்தூர் பகுதியில் ஆதித்யா குமார் என்பவர் தனது மூன்று வயது மகளின் பிறந்தநாளை சனிக்கிழமை இரவு வீட்டில் கொண்டாடியுள்ளார். இதையொட்டி, அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.
அப்போது, வீட்டின் மொட்டை மாடி மேல் பறக்கவிடப்பட்டிருந்த ஹீலியம் பலூன், திடீரென உயர்மின் அழுத்த கம்பியில் உரசியதில் வெடித்து சிதறியது. அப்போது, தீப்பொறி விழுந்து மொட்டை மாடி படிக்கட்டில் நின்றிருந்த ஆதித்யா குமார், அவரது மகள் மட்டுமின்றி, பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த 2 வயதான இஷான், 7 வயதான தயான் சந்த் மற்றும் 8 வயது நிரம்பிய சஞ்சய் ஆகியோருக்கு கை மற்றும் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஹீலியம் என்பது ஒருவகையான எரிப்பொருள் தான். இதன் மீது நெருப்பு விழுந்தால் வெடிக்க கூடிய தன்மையும் உள்ளது. எனவே இதை மக்கள் உபயோகம் செய்வதை பெருவாரியாக தவிர்க்கவும்.