undefined

மீண்டும் அதிர்ச்சி... தமிழக மீனவர்கள் 8 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்!

 

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. மீனவர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாநில அரசும், மத்திய அரசும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முன்வரவில்லை.  இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையின் சிறைப்பிடித்து கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாமக, அதிமுக, நாம் தமிழர் கட்சியினர், தேமுதிக என எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மீனவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்த நிலையிலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அக்கறை எடுப்பதிலை. இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், அவர்கள் தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. 

இந்தியா, இது குறித்து தனது எதிர்ப்பைக் கூட இலங்கையிடம் ஒரு போதும் தெரிவித்ததில்லை. மத்திய அரசு தமிழக மீனவர்களின் கைதுக்கு இதுவரை ஒருமுறை கூட கண்டனம் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்ந்த இந்த நிலை, கடந்த 10 வருட பாஜக ஆட்சியிலும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் அவர்களைச் சுற்றி வளைத்து, எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது. 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா