உல்லாசத்திற்கு பின் அதிர்ச்சி.. 8 சவரன் தங்க நகைகளை ஆட்டைய போட்டு எஸ்கேப் ஆன நண்பர்!
சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் லட்சுமி (54) பெயர் மாற்றப்பட்டுள்ளது. கணவரை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு முகநூலில் சிவா என்ற நபரை சந்தித்தார். இருவரும் செல்போனில் பேசி உறவை வளர்த்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சிவா லட்சுமியை நேரில் பார்க்க ஆசைப்பட்டு மாலதியின் வீட்டிற்கு வந்தார்.
அதன் பிறகு இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது லட்சுமி குளிப்பதற்கு நகைகளை கழற்றி மேசையில் வைத்துள்ளார். குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நான்கரை சவரன் மதிப்புள்ள செயின், ஒன்றரை சவரன் மதிப்புள்ள மற்றொரு செயின், ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் மதிப்புள்ள மோதிரம் உட்பட 8 சவரன் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து ஹாலில் அமர்ந்திருந்த சிவாவையும் காணவில்லை. இந்த சம்பவத்தை நினைத்து அசிங்கப்பட்டு யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில் நேற்று மாலை திருவிக நகர் காவல் நிலையத்தில் லட்சுமி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவின் பேஸ்புக் கணக்குகளை விசாரித்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!