undefined

அதிர்ச்சி... 8,000லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்... வாகன ஓட்டிகள் உஷார்!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட 8,000 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

தூத்துக்குடி தனிப்படை போலீசார் வெள்ளப்பட்டி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் படகுகளுக்கு மறைமுகமாக விற்பனை செய்வதற்காக அனுமதியின்றி 8,000 லிட்டர் கலப்பட டீசலை எடுத்துச்செல்வது தெரியவந்தது. 

லாரியை ஓட்டிவந்த திருநெல்வேலி மாவட்டம் பணகுடி ரோஸ்மியாபுரத்தைச் சேர்ந்த தவசிகனி மகன் சுசில் பிரபாகர் (30) என்பவரை பிடித்து கலப்பட டீசலுடன், தாளமுத்துநகர் போலீசார் மூலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சுசில் பிரபாகரை கைது செய்ததுடன், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!