அதிர்ச்சி.. இலங்கையில் இருந்து கடத்தி வந்த 14 கிலோ தங்கம் பறிமுதல்.. தமிழக மீனவர்கள் கைது!

 

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இரு குழுக்களாக பிரிந்து இன்று காலை ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் தனிப்படையினர் நடத்திய வாகனச் சோதனையில், புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதியில் இருந்து வாகனத்தில் வந்த 5,892.15 கிராம் எடையுள்ள தங்கம் சிக்கியது. இதேபோல் சிவகங்கையில் நடத்திய வாகன சோதனையில் 8,060.50 கிராம் கடத்தல் தங்கம் சிக்கியது. இந்த இரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 13.952 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய்.

இலங்கையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கடல் மார்க்கமாகவும், அங்கிருந்து சாலை மார்க்கமாகவும் தங்கம் கடத்தி வரப்பட்டதை உறுதி செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கம் கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர்.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீவிர விசாரணைக்கு பிறகே, கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார், கடத்தப்பட்ட தங்கம் எங்கு கொண்டு செல்லப்பட்டது உள்ளிட்ட மற்ற விவரங்கள் தெரியவரும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!