undefined

அதிர்ச்சி... 131 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்!

 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 131 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமாரப்பாளையம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக வந்த தகவல்படி, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் நேற்று காலை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, டி.வி.எஸ்., எக்ஸல்' டூவீலரில் வந்த, அபெக்ஸ் காலனியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் மாருதி ஆல்டோ காரில் வந்த ரவீந்திரன் என்பவரிடம் 125 கிலோ போதை பொருட்களை வாங்கி அவரது டூ வீலரில் வைத்தார். போலீசார் அப்போது இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதே போல் குமாரபாளையம் கம்பர் தெரு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போதைப்பொருள் விற்ற சாந்தா என்பவரை கைது செய்து 6.300 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இரு வழக்குகளில் மொத்தம், 131 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!