அதிர்ச்சி... மோட்டார் பைக்கில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்... வாலிபர் கைது!
தூத்துக்குடியில் மோட்டார் பைக்கில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மற்றும் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் நேற்று இரவு இரண்டாம் ரயில்வே கேட் அருகேஉள்ள ஆண்டாள் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் சந்தேகத்திற்கு இடமான வந்த வாலிபரை பிடித்து அவர் பைக்கில் வைத்திருந்த பார்சலை சோதனை செய்ததில், 10 கிலோ கஞ்சா இருந்து தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் அவர் தாளமுத்து நகர் பூபாண்டிபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் வேல்முருகன் (24), என்பதும், திண்டுக்கல்லில் இருந்து புதிய பஸ் நிலையத்தில் பஸ்ஸில் வந்த கஞ்சாவை திரேஸ்புரம் கடற்கரைக்கு கொண்டு சென்றதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவையும், பைக்கையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடியில் 10 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!