undefined

ஷாக்.. போதை மறுவாழ்வு மையத்தில் இருந்து 16 வயது சிறுவன் திடீரென எஸ்கேப்!

 

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மீது அசோக் நகர் காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு உள்ளது. சில நாட்களுக்கு முன், அசோக் நகர் போலீசார், 16 வயது சிறுவனை, திருட்டு வழக்கில் கைது செய்து, கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்நிலையில், போதைக்கு அடிமையான சிறுவனை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கோரி பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதைக் கேட்ட நீதிமன்றம், சிறுவனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்குமாறு மறுவாழ்வு மைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி கூர்நோக்கு வீட்டில் இருந்த சிறுவனை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர்.

மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் போதை மறுவாழ்வு மையத்தை விட்டு திடீரென தப்பி ஓடினான். இதனால் பதற்றமடைந்த போதை ஒழிப்பு மைய நிர்வாகி யுவராஜ், திருமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து 16 வயது வாலிபரை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!