மாங்கல்ய பலம் அருளும் மாத சிவராத்திரி விரதமுறை , பலன்கள்!!
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் 14 வது திதி சதுர்த்தசி . இந்நாளில் மாத சிவராத்திரி அனுசரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று ஆவணி மாத கிருஷ்ண பட்ச மாத சிவராத்திரி . இந்நாளில் மகா சிவராத்திரி தினத்தில் வழிபாடு செய்வதை போலவே சிவபக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். விரதமும் கடைபிடிக்கின்றனர். மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம்.
முதன்முதலாக விஷ்ணுவும், பிரம்மனும் தான் கண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாத சிவராத்திரி தினத்தில் நோன்பில் ஈடுபட்டு பிரார்த்தனை செய்பவர்களுக்கு வேண்டிய வரம் அருளுவார் என்பது காலம் காலமாக சிவபக்தர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. மாத சிவராத்திரி தினத்தில் அதிகாலையில் குளித்து கோவிலில் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்த பின் சிவபெருமானுக்கு பழங்கள் இனிப்பு வகைகளை படையலாக வைக்கலாம். காலை முதல் நோன்பிருந்து மாலையில் உலர் பழங்கள், பால், பால் சார்ந்த பொருட்களை உண்டு நோன்பை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உண்ணலாம். விரதம் முடித்து உண்ணும் உணவை உப்பில்லாமல் சாப்பிடுவது சிறந்தது.
சிவராத்திரி இரவில் 'ஓம் நமசிவாய' என பிரார்த்தனை செய்து சிவனை மனமுருகி வழிபடுபவர்களும், மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்களும் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம். திருமணமான பெண்கள் நோயில்லாத நீண்ட ஆயுள் கணவனுக்கு கிடைக்க வேண்டும் என சிவராத்திரி விரதத்தை கடைப்பிடிப்பர். கன்னிப்பெண்கள் கண்ணுக்கு இனிய நல்ல கணவர் கிடைக்க வேண்டி விரதம் இருப்பர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!