undefined

  மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் : சிவசேனா  முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது!  

 


மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமாக 288 பேரவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரத்தில் ஒரேகட்டமாக  தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 45 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனை கட்சி  வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தாணேயில் உள்ள கோப்ரி-பஞ்ச்பகாதி தொகுதியில் போட்டியிடுகிறார்.


அதன்படி ராஜபூரில் அமைச்சர் உதய் சமந்தின் சகோதரர் கிரண் சமந்தும், மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் அனில் பாபரின் மகன் சுஹாஸ் பாபர், சாங்லி மாவட்டத்தில் உள்ள கானாபூரிலும், மும்பை வடமேற்கு மக்களவை உறுப்பினர் ரவீந்திர வைகரின் மனைவி மனிஷா வைக்கர், ஜோகேஸ்வரி (கிழக்கு) தொகுதியிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் அட்சுலின் மகன் அபிஜித் அட்சுல் அமராவதி மாவட்டத்தில் உள்ள தர்யாபூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.  அதே நேரத்தில் சத்ரபதி சம்பாஜிநகர் மக்களவை உறுப்பினர் சந்தீபன் பும்ரேவின் மகன் விலாஸ் பும்ரே பைதான் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜக, சிவசேனை மற்றும் அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை கூட்டணியாகக் கொண்ட ஆளும்கட்சியான மகாயுதி, பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது   குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!