அதிர்ச்சி... இளம்பெண்களின் நிர்வாண வீடியோக்கள்...போலீசாரையே திணற வைத்த வேலூர் இளைஞர்!
இன்ஸ்டா, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலமாக பழகி பின்னர் பெண்களை ஆடையின்றி விடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வேலூரைச் சேர்ந்த இளைஞரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சுரேஷ்குமாரின் செல்போனை ஆய்வு செய்ததில் கடந்த 2022ல் இருந்து பல பெண்களிடம் இப்படி ஆபாச வீடியோக்களை எடுத்து, அதைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது வங்கி கணக்கின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பல மாவட்டங்களிலும் இப்படி சமூக வலைத்தளங்களில் மூலமாக பெண்களுடன் பழகி, ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் திருமணமான பெண்களுக்கான சமூக வலைதளக் குழு இயங்கி வரும் நிலையில், அந்த குழுவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா குடிசை கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (29) என்பவர் இணைந்து தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் சகோதரி என அழைத்துப் பேசி பழகி வந்த சுரேஷ்குமார், நாளடைவில் பெண்ணிடம் குடும்ப விஷயங்களை பேசி காதலிப்பதாகக் கூறியுள்ளார்.
அதனையடுத்து அந்த பெண் ஆடையின்றி சுரேஷ்குமாருடன் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார். அதனை சுரேஷ்குமார் பெண்ணின் சம்மதமில்லாமல், அவருக்குத் தெரியாமல் பதிவு செய்துள்ளார். அதன்பின் பெண்ணிடம் ரூ.10,000 கேட்டு மிரட்டியுள்ளார். அதனால் அப்பெண் ரூ.6 ஆயிரம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து சுரேஷ்குமார் மிரட்டியதை அடுத்து பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போனைப் பறிமுதல் செய்து சோதனையிட்டதில் பல பெண்களை இப்படி ஏமாற்றி வீடியோ பதிவு செய்து கடந்த 2022ல் இருந்து பணம் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. ஆடையின்றி பெண்களை வீடியோ காலில் பேசி பதிவு செய்து பணம் பறித்துள்ளது. அவரது வங்கி கணக்கை ஆராய்ந்ததில் தெரிந்துள்ளது.
இதுபோல சுரேஷ்குமாரிடம் ஏமாந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் தேனி, திருச்சியில் 2 வழக்குகளும் சுரேஷ்குமார் மீது பதியப்பட்டது தெரிய வந்தது. அதனையடுத்து சுரேஷ்குமார் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!