SHE BOX | பணியிடங்களில் பாலியல் தொல்லை.. பெண்கள் புகாரளிக்க தனி இணையதளம் துவக்கம்!
நாடு முழுவதும் சமீபமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பணியிடங்களில் நிலவும் பாலியல் தொல்லைகள் குறித்து பெண்கள் புகார் அளிக்க புதிய இணையதளத்தை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்.
பணியிடங்களில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிப்பதற்காக ‘ஷீ-பாக்ஸ்’ (she-box) என்ற ஒருங்கிணைந்த இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “பெண்கள் பாலியல் தொல்லை குறித்து இந்த ஷீ பாக்ஸ் இணையதளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். புகார் என்ன நிலையில் உள்ளது என்பதை அவ்வப்போது பார்க்கலாம். புகார்களை கண்காணிக்க ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். காலவரையறையுடன் புகார்கள் கையாளப்படுவதை இது உறுதி செய்யும்.
பணியிடங்களில் பெண்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இதை காணலாம். பெண்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவ இந்த நடவடிக்கை உதவும்” என்று கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!