undefined

இளம்பெண் பலாத்காரம்... குற்றத்தை ஒப்புக்கொண்டார் நடன இயக்குநர் ஜானி.. போலீசார் தகவல்!

 
ஜானி

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனர் ஜானி. சில நாட்களுக்கு முன்பு  21 வயது பெண் நடன கலைர் ஜானி மாஸ்ட்ரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பின் போது ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள நார்சிங்கி போலீசார் விசாரணை நடத்தி ஜானி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஜானி மாஸ்டர்

இதனையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. தெலுங்கு திரையுலகில் நடன இயக்குனராக ஜானி தொடர்ந்து பணியாற்ற பிலிம் சேம்பர் தடை விதித்தது. பவன் கல்யாணும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 16 வயதில் ஜானி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த இளம்பெண் 10 பக்க ஆவணங்களை தெலுங்கானா மகளிர் ஆணையத்தில் சமர்பித்தார்.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜானியை தெலுங்கானா போலீசார் கோவாவில் கைது செய்தனர். இந்நிலையில், புகார் அளித்த பெண்ணை மைனராக இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜானி மாஸ்டர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, தனது கணவர் ஜானி மீதான பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால் அவரை விட்டு விலகத் தயார் என அவரது மனைவி கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், பாலியல் குற்றத்தை ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!