undefined

திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. சிறைக் காவலர் மாற்று சிறையில் அடைப்பு!

 

கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் புகார், சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, திருச்சி மத்திய சிறையில் 2,517 பேரை அடைக்கும் வசதி உள்ளது. தற்போது, ​​836 தண்டனை கைதிகள் உட்பட சுமார் 1,600 கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சியைச் சேர்ந்த 32 வயது திருநங்கை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி அரியமங்கலம் காவல் நிலைய எல்லையில் நடந்த திருட்டு வழக்கில் திருநங்கை சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மத்திய சிறையில் சிபி-1 என்ற தனி அறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த சிறைக் காவலர் மாரீஸ்வரன் என்பவர்  மாறுதலாகி இங்கு வந்தார். அப்போது, தனி அறையில் இருந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட திருநங்கை, திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதியிடம் புகார் அளித்தார். ஆனால் ஜெயிலர் மாரீஸ்வரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகாரை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த திருநங்கை திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ​​நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணையத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கறிஞர் சுப்புராமன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் திருச்சி மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது திருநங்கையின் புகார் உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து, ஜூலை 11ம் தேதி திருச்சி மத்திய சிறை டிஐஜி ஜெயபாரதி, சிறை கண்காணிப்பாளர் (எஸ்பி) ஆண்டாள், சிறை (தலைமை) வார்டன் மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஜூலை 11ம் தேதி ஏடிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டார். ஜூலை 21இல் காவலர் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக கே.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோசலராமன் தலைமையிலான போலீசார், ஜெயிலர் மாரீஸ்வரனை ஆகஸ்ட் 31ம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர் பணியாற்றிய சிறையில் அடைக்கக் கூடாது என புகார் எழுந்தது.இதையடுத்து மாரீஸ்வரனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் அம்சவேணி சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை