undefined

பள்ளி மாணவிகளை மது குடிக்க வைத்து பாலியல் தொல்லை.. பள்ளி முதல்வர், செயலர் கைது!

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடியில் இயங்கி வரும் சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவிகள் 5 பேருக்கு மது கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்பயிற்சி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உடன்குடியில் இயங்கி வரும் சல்மா மெட்ரிகுலேசன் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பொன் சிங். இவர் பள்ளியின் மாணவிகள் 5 பேரை மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக தூத்துக்குடிக்கு அழைத்து சென்றுள்ளார். 

இந்நிலையில் 5 மாணவிகளையும் உடற்பயிற்சி ஆசிரியர் மது அருந்தச் சொல்லி வற்புறுத்தி, மது குடித்தால் தான் போட்டியில் வெற்றிப்பெற முடியும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்து அத்துமீறியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மீறி கூறினால் அதன் பிறகு எங்கேயும் படிக்க முடியாமல் செய்து விடுவதாகவும் மாணவிகளை பொன் சிங் மிரட்டியதாக கூறப்படுகிறது. 

போட்டிகள் முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறிய நிலையில் ஆவேசமடைந்த பெற்றோர்கள் திரண்டு சென்று பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி நிர்வாகத்தினர் முறையான பதில் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் பின்னர்  பெற்றோர்கள் பள்ளியை விட்டு கிளம்ப மறுத்து தொடர்ந்து உடற்பயிற்சி ஆசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய நிலையில், கோவைக்கு தப்பிச் சென்ற உடற்பயிற்சி ஆசிரியர் கோவையில் கைது செய்யப்பட்டு திருச்செந்தூர் அழைத்து வரப்பட்டார்.

இந்நிலையில் பெற்றோர்கள் புகாரளித்தும் போலீசாருக்கு தகவல் அளிக்காமல், உடற்பயிற்சி ஆசிரியர் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த பள்ளியின் முதல்வர் சார்லஸ் ஸ்வீட்டி மற்றும் பள்ளியின் செயலர் சையது அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!