undefined

பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை.. புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி அதிரடியாக கைது!

 

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி தலையில் காயத்துடன் நேற்று எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமியின் பிறப்புறுப்பில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, சந்தேகத்தின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவரின் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியின் தந்தை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தையும், புரட்சி பாரதம் கட்சியின் புதுச்சேரி மாவட்ட தலைவருமான ரவியை காவல் துறையினர் கைது செய்தனர். முன்னதாக சிறுமியின் புகாரை மறுத்த ரவி, பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து போலீசார் ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 6 வயது சிறுமியை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை