undefined

 மாணவிக்கு பாலியல் தொல்லை... அரசுப்பள்ளி தலைமையாசிரியர் கைது!

 
 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியராக திருத்தணி ஒன்றியம் தாடூர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (57) என்பவர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் இவர் அதே பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. தலைமையாசிரியர் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டது குறித்து வீட்டிற்குச் சென்றதும் மாணவி தனது பெற்றோரிடம் இது குறித்து கூறியுள்ளார். 

உடனடியாக மாணவியின் பெற்றோர் ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் மீது புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் கந்தன் மற்றும் போலீசார் தலைமையாசிரியர் தாமோதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

பள்ளி ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சமீபகாலங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பள்ளிகளில், குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆசிரியர்களும், தலைமையாசிரியர்களும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வரும் போக்கு அதிகரித்து வருவது அதிர்ச்சியளிப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!