undefined

+2 மாணவிக்கு பாலியல் தொல்லை... வலுக்கட்டாயமாக திருமணம்... அதிர வைத்த பள்ளி நிர்வாகி!

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்த பள்ளியின் நிர்வாகியும், ஆசிரியருமான கோபால் மகன் கோபிநாத் (29). இவர் கடந்த ஆண்டு அதே பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அந்த மாணவியை அவர் மறைமுகமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த மாணவி பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் கோபிநாத் மற்றும் அந்த மாணவி நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள் இது குறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தியதில், கோபிநாத் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். கோபிநாத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத நிலையில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!