undefined

மலையாள சினிமா பாலியல் புகார்கள்.. கோபத்தில் பத்திரிக்கையாளர் மைக்கை பிடுங்கி வீசிய மத்திய அமைச்சர்!

 

நடிகர்கள் மீதான பாலியல் புகார்களால் மலையாள திரையுலகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓடும் காரில் நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோது அதில் முன்னணி நடிகர் திலீப்புக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மலையாள திரையுலகில் நடிகைகள் மீதான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இக்குழு ஏற்கனவே அறிக்கை தயாரித்து கேரள முதல்வரிடம் அளித்துள்ளது. ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது நடிகர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக நடிகரும், மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் இன்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் மிகவும் கோபமாக பதிலளித்தார்.

அவர் பேசுகையில், நடிகைகளின் பாலியல் குற்றங்களை நீதிமன்றம் விசாரிக்கும். இதை ஏன் ஊடகங்கள் கேட்கின்றன என பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது பத்திரிக்கையாளரின் மைக்கை பிடுங்கி எறிந்தார். மேலும், பத்திரிக்கையாளர்களிடம் சுரேஷ் கோபி கடும் கோபத்தில் நடந்து கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை