undefined

அதிர்ச்சி... பள்ளிவாசலுக்குள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. கொந்தளித்த மக்கள்!

 

சமீபத்தில் தானே மாவட்டத்தில் இரு சிறுமிகள், தனியார் பள்ளி ஒன்றின் ஊழியராலேயே பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பள்ளிகள் பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இல்லையெனில், அனைவருக்கும் கல்வி என்று சொல்லி என்ன பயன் என்று நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது. அப்படி வேலியே பயிரை மேய்வது போல பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர், மருத்துவர்கள், காவல் துறையைச் சேர்ந்தவர்கள், சித்தப்பா. பெரியப்பா, அண்ணன், சித்தி பையன்.. சில இடங்களில் அப்பா.. என்று பல இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே பாலியல் தொல்லை தருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே பள்ளிவாசலில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியில் இயங்கி வரும் பள்ளிவாசலில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அரபி மொழியில் குரான் பயின்று வருகின்றனர். பள்ளிவாசலுக்கு சென்று அரபி மொழியில் குரான் ஓத கற்று வரும் அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் சிறுமிகளுக்கு பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்ணிற்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு சென்று சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.  இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சார்பில் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் பள்ளிவாசல் அரபு மொழி ஆசிரியர் காரனோடையைச் சேர்ந்த முகமது ஆசிப் (32) என்பவர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

  ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா