செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல் கையெழுத்து!
தமிழகத்தில் 2023 ஜூன் மாதம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை முடிவடைந்து, நேற்று செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ரூ.25 லட்சத்திற்கு 2 பிணை உத்தரவாதங்கள் , ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து, வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு, சாட்சிகளை கலைக்காமை என நிபந்தனைகளை முன்னிறுத்தி செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
நேற்று பிற்பகலில் இந்த ஜாமீன் உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பிணை உத்தரவாதங்கள் ஏற்கப்பட்டு செந்தில் பாலாஜி நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். சிறை வாசலிலேயே அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால், உச்சநீதிமன்ற ஜாமீன் நிபந்தனையின்படி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று கையெழுத்திட வேண்டும். ஜாமீனில் வந்த முதல் நாளே சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திடுவதற்காக நேரில் ஆஜராகினர் செந்தில் பாலாஜி.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!