undefined

 செந்தில் பாலாஜி Come back கொடுத்துள்ளார்... ஸ்டாலின் பெருமிதம்!

 

 இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.  அதன் பிறகு  முதல்வர் ஸ்டாலின் ” கோவையில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வந்த அமைச்சர்  செந்தில் பாலாஜியின் செயல்பாடுகளை கண்டு பொறுக்கமுடியாமல் சிலரது சதியால் அவருக்கு பல்வேறு தடைகள் கொடுக்கப்பட்டன. 


ஆனால், அந்த தடைகளை செந்தில் பாலாஜி தகர்த்து, தற்போது மீண்டும் கோவைக்கு அரசு திட்டங்களை செயல்படுத்த செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்துள்ளார்.” என அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து  மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசியுள்ளார்.  மேலும் “சென்னையில் அண்ணா நூலகம் இருக்கிறது. மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் இருக்கிறது.

கோவையில்  இருவரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் இந்த நூலகம் அமைய உள்ளது. ரூ300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் நூலகத்தோடு சேர்த்து அறிவியல் மையத்தையும் அமைக்க உள்ளோம். இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையம் 2026 ஜனவரியில் திறக்கப்படும். 17 ஏக்கரில் கோவையில் ஐடி பார்க் திறக்கப்படும், கோவையில் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் விரைவில் அமைக்கப்படும். ”  என உரையாற்றியுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!