undefined

 

திருச்செந்தூரில் பரபரப்பு... திடீரென 80 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்!

 

 

திருச்செந்தூரில் திடீரென 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாகவே அமாவாசை மற்றும் பெளர்ணமி தினங்களையொட்டி திருச்செந்தூரில் கடல் உள்வாங்குவது வழக்கம். ஆனால் இம்முறை 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டுவது உண்டு. 

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் கால் நனைத்து நாழிக்கிணற்றில் குளித்து தரிசனம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. 

இன்று புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் திருச்செந்தூரில் நேற்று மாலை முதலே கடலின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் பகுதியில் சுமார் 80 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுகிறது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை 500 மீட்டர் தூரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. 

கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் பாசி படித்த பச்சைப் பாறைகளின் மீது ஏறி நின்றபடி செல்போனில் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். கடல் உள்வாங்கிய பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!