தூத்துக்குடியில் பரபரப்பு... 2 இளம்பெண்கள் திடீர் மாயம்.. பெற்றோர்கள் பதற்றம்!
தூத்துக்குடி, தருவைகுளத்தில் 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி சங்குகுளி காலனியைச் சேர்ந்தவர் சரவணன் மகள் அதிர்யா (17) இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்பு வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. இது குறித்து அவரது தாயார் முத்துலட்சுமி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமலதா வழக்கு பதிவு செய்து விசாரணை எடுத்து வருகிறார்.
மற்றொரு சம்பவத்தில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ் மகள் விஜயலட்சுமி (18), இவரை கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து வேல்ராஜ் தருவைகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!