கேரளாவில் பரபரப்பு... வழிதவறி வீட்டுக் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய புலி.. பெரும் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு!

 

காலையில் தூங்கி எழுந்து பார்க்கும் போது, நம் வீட்டு கிணற்றுக்குள் புலி ஒன்று உறுமிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் ஸ்ரீநாத் நேற்று காலையில் அலறினார். கேரள மாநிலம், வயநாடு, சுல்தான் பத்தேரி அருகே உள்ள முனைக்குழியில், நேற்று முன் தினம் இரவு, இரை தேடி சுற்றித் திரிந்த புலி ஒன்று வழி தவறி, அந்த பகுதியில் உள்ள வீட்டு கிணற்றில் விழுந்தது. இரவு முழுவதும் கிணற்றுக்குள் விழுந்த புலி அலறியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல், மோட்டாரை ஆன் செய்த பிறகும் வழக்கமான நேரத்திற்குள் தொட்டி நிரம்பாததால் கிணற்றில் ஏதோ கோளாறு இருப்பதை வீட்டு உரிமையாளர் ஸ்ரீநாத் உணர்ந்தார்.

இதற்குப் பிறகு, கிணற்றில் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கிணற்றில் சிக்கிய புலி அலறியடித்துக் கொண்டு தப்பியோட காத்திருந்தது, உடனடியாக இது குறித்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் தென் வயநாடு வனச்சரக அலுவலர் ஷஜ்னா கரீம் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

டார்ட்டிங் நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையின் விரைவு மீட்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு குவிந்துள்ளனர். கிணற்றில் இருந்து புலியை மீட்கும் பணி நடைப்பெற்றது. பின், புலிக்கு மயக்க ஊசி செலுத்தி 6 மணி நேர போராட்டத்திற்கு உயிருடன் மீட்கப்பட்டது. கிணற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட புலியை கூண்டில் அடைத்து, அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்