undefined

சென்னையில் பரபரப்பு... போதைப்பொருள் சப்ளை... ஆர்யா பட நடிகை கைது!

 

சென்னையில் போதைப் பொருள் வைத்திருந்ததாகவும், சப்ளை செய்து வருவதாகவும் பிரபல சின்னத்திரை நடிகை மீனா இன்று கைது செய்யப்பட்டார். இவர் நடிகர் ஆர்யாவுடன் ஒரு படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. திரையுலகினர், சின்னத்திரை பிரபலங்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்திருக்கிறாரா என்கிற விசாரணை நடந்து வருகிறது. 

சென்னையில், தொடர்ச்சியாக அதி நவீன விலை உயர்ந்த போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ராயப்பேடை அருகே பொதைப்பொருள் விற்பனை செய்த நபர் ஒருவரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் சேர்ந்து பெண் ஒருவரும் இந்த விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை இன்று போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் மீனா என்பதும், அவர் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக இருந்து வருவதும், தொடர்ச்சியாக இப்பகுதியில் இதே போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இவருக்கு பின்புலத்தில் உள்ளது யார், இவர் யாரிடம் இருந்து இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வாங்குகிறார் என்பது குறித்த தகவல் விரைவில் தெரிய வரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை மீனா, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!