கல்லூரியில் ஜூனியர் மாணவருடன் ஓட்டமெடுத்த சீனியர் மாணவி.. விசாரணையில்  பகீர் தகவல்!

 

சேலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஜூனியர் மாணவரிடம் மூன்றாம் ஆண்டு சீனியர் மாணவி ஒருவர் மாயமாகி உள்ளார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கண்டறிந்து மீட்டனர். ஈரோட்டைச் சேர்ந்த 21 வயது மாணவி, சேலம் தனியார் சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சேலம் கன்னங்குறிச்சியில் தனது தோழிகளுடன் தங்கி இருந்தார். கடந்த 11ம் தேதி மாணவியின் தந்தை மகளுக்கு செல்போனில் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது ஒரு வாலிபர் போனை எடுத்தார்.

அவர் தனது பெயரைச் சொல்லி, உங்கள் மகளை காதலிக்கிறேன் என்று கூறிவிட்டு செல்போனை அணைத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை கடந்த 17ம் தேதி கல்லூரிக்கு வந்து விசாரித்தார். அப்போது, அவரது மகள் கடந்த 11ம் தேதி கல்லூரியில் டிசி வாங்கியதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த வாலிபர் யார் என்று விசாரித்தபோது, அவர் அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நாயனார்புரத்தை சேர்ந்த 20 வயது மாணவர் என்பதும், அவரும் டிசி வாங்கி சென்றதும் தெரியவந்தது.   இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.

இதனிடையே கல்லூரி செல்லும் தனது மகனைக் காணவில்லை என மாணவனின் தந்தை சாரதியும் கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், மாணவர்கள் இருவரும் ஏற்காட்டில் இருப்பது தெரிய வந்தது. அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இருவரும் பெற்றோருடன் செல்வதாக கூறினர். நீதிமன்ற உத்தரவுப்படி இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். வேறு கல்லூரியில் சேர்ந்து சட்டப் படிப்பை முடித்துவிட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தனர். இதை ஏற்று இருவரும் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்