செம.. ஆசிய கோப்பையில் சாதனை படைத்த திருச்சி ரயில்வே கலெக்டர்..!

 
திருச்சி ரயில்வே டிக்கெட் கலெக்டர் ஆசிய கோப்பையில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

19 வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி தொடங்கியது. இதில் கலந்துக்கொண்டுள்ள இந்தியா தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அனஸ், அமோஜ், அஜ்மல், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணியினர் கலந்துக்கொண்டனர்.

<a href=https://youtube.com/embed/xA6a6-xMSW0?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/xA6a6-xMSW0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இதில் கலந்துக்கொண்டு இந்திய அணியினர் பந்தய தூரத்தை 3:01.58 வினாடிகளில் கடந்து சாதனைப் படைத்தனர்.  இதன் மூலம் இந்தியா மேலும் ஒரு  தங்கம் வென்றது. இதில் கலந்துக்கொண்ட ராஜேஷ் ரமேஷ், திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுவரை இந்திய அணி 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 82 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 174 தங்கம் உட்பட 321 பதக்கங்களுடன் சீனா உள்ளது. 37 தங்கத்துடன் ஜப்பான் 2வது இடத்திலும், தென்கொரியா 33 தங்கப்பதக்கங்களுடன் 3வது இடத்திலும் உள்ளது.