undefined

செம மாஸ்... தூத்துக்குடியில் ஹரப்பா நாகரிகத்தை விட தொன்மையான கிணறு கண்டுப்பிடிப்பு!

 

தோண்ட தோண்ட அதிசயங்கள் மேலெழும்பும் என்பதைப் போல தூத்துக்குடி மாவட்டம் பட்டிணமருதூரில் ‘டோலகா ஹரப்பா’ நாகரிகத்தை விட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் வடிவமைக்கப்பட்ட செவ்வக வடிவ கிணற்றை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியினை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி பட்டிணமருதூர் கிராம நிர்வாக அதிகாரியின் நேற்றைய பணியோடு சேர்ந்துகள ஆய்வு பணியினை மேற்கொண்ட சமயம் அக்கிராமத்தின் சர்வே எண் 51ஃ4 பகுதியில் மிக மிக தொன்மையான ‘டோலகா ஹரப்பா’ நாகரிகத்தினை விட தொன்மையானதாக தென்படும் மணல் கற்களால் அடுக்குதல் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட கிணற்றினை கண்டறிந்ததாகவும், அதன் தொன்மை தெரியாமல் பாதுகாப்பற்று காணப்படுவதாகவும், மேலும் இத்தகைய மிகப்பெரிய கிணறானது எங்கனம் நில உடமை சீர்திருத்தத்திற்கு (1983ம் ஆண்டு) முன்பும், பின்பும் உள்ள வருவாய் துறையின் இந்த கிராம வரைபடம் மற்றும் புல வரைபடம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது என்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

 
இது குறித்த தகவல்களை உடனடியாக புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளை கிராம நிர்வாக அதிகாரி வாயிலாக வருவாய்துறை உயர் அதிகாரிகளிடமும், தான் இந்த பகுதியில் கள ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல அதிகாரிகளிடமும் பகிர்ந்து ஆவணப்படுத்தியுள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

மேலும் தனது கோரிக்கைகளாக இந்த கிணற்றினை உடனடியாக ஆய்வு செய்து வரைபடங்களில் பதிவு செய்து அரசுடமையாக்கி, பாதுகாக்கப்பட்ட தொன்மை சின்னமாக அறிவிக்கவேண்டும் என்றும் இதேபோன்று சர்வே எண் 40ன் தென்கடைசி பகுதியில் காணப்படும் ஏற்கனவே 29.07.2024 அன்று ஆவணப்படுத்தப்பட்ட சற்று சிறிய அளவிலான சமீபத்திய வெள்ளத்தால் மூடப்பட்டுள்ள சுமார் 40-50 அடி ஆழம் உள்ளதாக காணப்பட்ட வட்டக்கிணற்றினையும் ஆய்வு செய்யவேண்டும்.

அதேபோல் இந்த கிராம வரைபடத்தின் சர்வே எண் 45/4 மற்றும்; சர்வே எண் 184/1 ஆகியவற்றின் புல எல்கைக்குள் புல விளக்கியாக குறிப்பிடப்பட்டுள்ள கிணறுகளின் தொன்மைகளையும்; கண்டறிய வேண்டும் என்றும் ஏனென்றால் பல வரலாற்று எச்சங்கள் நிச்சயமாக இந்த தொன்மையான கிணறுகளுக்குள் புதைந்து காணப்படலாம் என்றும் ‘காலம் தாழ்த்தாது இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் துரிதமாக தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு இந்த பகுதியின் கீழபட்டிணம் தொடர்பான வரலாற்று தொன்மையின் உண்மையினை வெளிகொணர்ந்திட வேண்டும்’ என்றும் தனது கோரிக்கைகளை பதிவு செய்தார்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை