undefined

 செம கெத்து... கொரிய தீபகற்பத்துடன் பாண்டியர்கள் வணிக தொடர்பு... தொன்மையான நாணயம் கண்டெடுப்பு!

 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாண்டியர்கள், கொரிய தீபகற்பத்துடன் வைத்திருந்த வணிக மற்றும் கலாச்சார தொடர்புகளுக்கு சான்றாக தொன்மையான ‘கொரிய நாணயம்’ தஞ்சை பல்கலை கழக மாணவ, மாணவியரால் கண்டெடுக்கபட்டுள்ளது.

தஞ்சை பல்கலையில் முதுநிலை கல்வி பயின்றுவரும் தூத்துக்குடி சார்ந்த மாணவி ஐஸ்வர்யா, தினேஷ் ஜோயல் இருவரும் திருநெல்வேலியைச் சேர்ந்த ஷர்வேஸ்,   மகதன்யா ஆகியோருடன் இணைந்து சமீபத்தில் ஆவணப்படுத்தப்பட்டு செய்தியாக்கப்பட்ட மிக மிக தொன்மையான செவ்வக வடிவ கிணற்றினை பார்வையிடும் விதமாக கடந்த 15ம் தேதி சென்றதாகவும், அப்போது தூத்துக்குடியினை சார்ந்த பெ.ராஜேஷ் செல்வரதி என்ற தொல்லியல் ஆர்வலர் முயற்சியின் பலனாக தற்போது இந்திய தொல்லியல்துறை கள ஆய்வு மேற்கொண்டுவரும் வரலாற்று தொன்மங்கள் குவிந்து காணப்படும் மற்ற பகுதிகளையும் கிராம மக்கள் உதவியுடன் பார்வையிட சென்றதாகவும், அப்போது  அந்த பூமியின் மேற்பரப்பிலேயே காணப்படும் அதிக அளவிலான சங்கு ஆபரணங்களின் சிதைவுகள், மற்பாண்ட சிதைவுகள், பீங்கான் சிதைவுகள், இரு பழங்கால நாணயங்கள், பெண் தெய்வம்(லெட்சுமி) போன்ற சுடுமணல் பொம்மை, உலோக வார்ப்பு எச்சங்கள், அரவை கல், வித்தியாசமான செங்கற்கள் கட்டுமானம், தொன்மையான வட்ட கிணறுகள் போன்றவற்றை கண்டறிந்ததாகவும், இவற்றை முறையாக தாங்கள் புகைப்படங்கள் எடுத்து ஆவணபடுத்திக் கொண்டு பழங்கால நாணயங்களை மட்டும் தங்கள் கல்லுரி பேராசிரியர்களிடம் காண்பித்து விபரம் அறிய கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர். 

இதற்கிடையில்  இந்த பகுதியினை தொடர்ந்து கள ஆய்வு பணி செய்து ஆவணப்படுத்தி வரும் தூத்துக்குடி சார்ந்த பெ.ராஜேஷ் செல்லரதியாகிய தன்னிடம் இது தொடர்பான விபரங்களை புகைப்படங்களாக பகிர்ந்து ஆவணப்படுத்த கூறியுள்ளதாகவும், புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது  பகிர்ந்துள்ள ஓர் நாணயமானது ‘கொரிய நாணயம்’ போன்றுள்ளது எனவும், இது நமது பண்டைய பாண்டியர்களின் கடல் கடந்த வணிக மற்றும் கலாச்சார உரவுகளுக்கு சான்றாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக கொரியர்களால் தெய்வமாக கருதப்படும் ‘சூரிரத்னா’ (Queen Heo Hwang Ok) என்ற பண்டைய இளவரசி ‘அயுத்தா’ என்ற பகுதியில் இருந்து வந்ததாகவும் அது சமயம் அவரது கொடியில் இரட்டை மீன் சின்னத்தினை பார்த்ததாக தெரிவித்தார். 

எனவே அவர் நமது தென்னகத்து பாண்டியர் தேசத்தை சார்ந்தவராக இருக்கலாம் என்ற ஓர் கருத்தும் நிலவுவதாகவும், மறைந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் ஒரிசா பாலு அய்யாவும் பல்வேறு நிகழ்வுகளில் நமது அநேக தமிழ் சொற்கள் மற்றும் உச்சரிப்புகள் இன்றும் கொரிய தீபகற்பத்தில் பயன்பாட்டில் உள்ளதை ஆவணப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது என்றும் தனது வரலாற்று புரிதல்களை பதிவு செய்து விரைவாக தொல்லியல் துறையினர் இந்த பட்டினமருதூர் ஆய்வு பகுதியினை முறையாக அறிவித்து பாதுகாத்து தங்கள் ஆய்வினை தொடர்ந்து நமது மிக மிக தொன்மையான வைப்பாற்று நாகரீகத்தினை வெளி கொணர்ந்திட வேண்டுகோள்களை தொல்லியல் ஆர்வலர்கள் சார்பாகவும், தஞ்சை மாணவ மாணவியர் சார்பாகவும் கோரிக்கைகளாக பதிவு செய்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!