undefined

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் சீமான்.. விறுவிறுப்பாக நடைபெறும் படக்காட்சி..!

 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்.ஐ.சி) படத்தில் சீமான் நடிப்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்ஐசி படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும், முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தில் இணைந்துள்ளார்.

முன்னதாக இது குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில் தற்போது சீமானின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இப்படத்தில் பிரதீப்பின் அப்பாவாக சீமான் நடிக்கிறார். மேலும், அவரது பாத்திரம் இயற்கை விவசாயத்தின் ஆதரவாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நடிப்பதற்காகத்தான் சீமான் தாடி வளர்த்ததாக கூறப்படுகிறது. தற்போது சீமான் தொடர்பான காட்சிகள் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் படமாக்கப்பட்டு வருகிறதாக தகவல் வெளியாகி உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க