இன்று இரவு மிஸ் பண்ணாதீங்க... சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்... நாசா அறிவிப்பு!
சென்னை மக்கள், இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று இரவு மிஸ் பண்ணாதீங்க. மறக்காம உங்க குழந்தைகளுக்கும் காட்டுங்க.
சர்வதேச விமான குழுக்கள், ஏவுகணை, வாகனங்கள், விமான செயல்பாடுகளின் பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றி வரும் இந்த சர்வதேச விண்வெளி மையம், நாளொன்றுக்கு 15.5 முறைகள் பூமியை வலம் வருகிறது.
இந்த விண்வெளி மையத்திற்கு தற்போது வரை கடுமையான பயிற்சி மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வீரர்கள் மட்டுமே சென்று வந்துள்ளனர். தற்போதைய சூழலில் விண்வெளி ஆய்வு மையத்திற்கு சுற்றுலா செல்லக் கூட அனுமதி இல்லை. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த விண்வெளி ஆய்வு மையத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடிய வாய்ப்பு சென்னை மக்களுக்கு வாய்ப்பு இருக்கிறது.
இன்று மாலை 7.09 மணியிலிருந்து 7.16 மணி வரை சர்வதேச விண்வெளி மையத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் 400 கிலோமீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்லும் போது, அதனை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!