பாகிஸ்தானில் 144 தடை உத்தரவு அமல்... இம்ரான்கானை விடுதலை செய்ய கோரி போராட்டம்!
பாகிஸ்தானில் இம்ரான்கானை விடுதலை செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே தோஷகானா ஊழல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. எனவே அவர் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதேபோல் அலுவலக ரகசியங்களை கசிய விட்ட வழக்கிலும் 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தபோதிலும் தோஷகானா ஊழல் வழக்கில் தனது மனைவி புஷ்ரா பீபியுடன் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இந்தநிலையில் அவரை விடுதலை செய்ய கோரி இம்ரான்கான் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் அவர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லாகூர், பெஷாவர் ஆகிய நகரங்களை தலைநகர் இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதன்மூலம் தலைநகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அங்கு பொதுக்கூட்டம், பேரணி போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!