undefined

கார் சீட்டின் கீழ் ரகசிய அறை.. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி விற்பனை.. 4 பேர் அதிரடியாக கைது!

 

தஞ்சாவூரை அடுத்த பள்ளியக்ரஹாரம் கூடலூர் சாலையில் சிலர் கார்களில் மறைத்து வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தஞ்சாவூர் கிழக்கு காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சந்திரா, சிறப்பு காவல் ஆய்வாளர் டேவிட் ஆரோக்கியராஜ் தலைமையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, ​​அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு கார்கள் நின்றன. இரு காரில் இருந்த 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.

சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் 65 பொட்டலங்களில் 136 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் மதுரை ஆரப்பாளையம் அருகே உள்ள கம்மகரையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (44), மதுரை கூடல் நகரைச் சேர்ந்த சுப்ரமணி (45), புதுக்கோட்டை மாவட்டம் மெய்மிசல் பகுதியைச் சேர்ந்த டேவிட் பெர்னாண்டோ (30), சேமங்கோட்டை பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பது தெரியவந்தது.

இந்த 4 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்றதும், தஞ்சாவூருக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யத் தொடங்கியதும் தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இரு கார்களும் ஒரே தமிழ்நாடு பதிவு எண்ணைக் கொண்டிருந்தன. அந்த கார்களில், பின் இருக்கையின் கீழ், கஞ்சா கடத்த தனி ரகசிய அறை அமைத்து, அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கார்கள், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், காரில் கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த போலீசாரை தஞ்சாவூர் டிஎஸ்பி சோமசுந்தரம் பாராட்டினார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!