undefined

பரபரப்பு... 10 நாட்களில் 2வது ரெய்டால்  உணவக உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி...!!

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  காஞ்சி பிஸ்மில்லாஹ்  உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்  உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் என்பவர் சோதனை செய்தார். அந்த சமயத்தில்  பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதாகவும் சிக்கனில் செயற்கை நிறமிகள்  சேர்த்திருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில்   இறைச்சியினை சோதனைக்கு அனுப்பி   ஆய்வு செய்திட வேண்டும் என இறைச்சிகளை எடுத்து சென்றனர். மேலும் சோதனைக்கு பிறகு  அதற்கான அபராத தொகையினை ஆன்லைன் மூலமாக செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்  நேற்று இரவு 8 மணிக்கு வந்த அதே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சந்திரசேகரன் தங்களது கடை மீது புகார் வந்திருப்பதாக கூறி சோதனை செய்திட வேண்டும் என மீண்டும்  கூறியுள்ளார். 


 அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரி. சம்பந்தப்பட்ட கடையின் பெயர், தெரு பெயர் அனைத்தையும் குறித்து கொண்டு   கடையின் உள்ளே  அதிகாரி  நுழைந்தார். ஏற்கனவே கடந்த 10நாட்களுக்கு முன்பு சோதனைக்காக சாம்பிளுக்காக  எடுத்து சென்ற சோதனை முடிவுகள் இன்னும்  வராத நிலையில் மீண்டும் சோதனைக்காக சிக்கன் இறைச்சியை எடுத்தார்.   அதே நேரத்தில் சிக்கன் 65ல்  செயற்கை நிறமி சேர்த்துள்ளது. இதற்காக   அபராதத் தொகை செலுத்த வேண்டும் அவற்றை பில் இன்றி செலுத்துகிறீர்களா இல்லை முடிவு வந்த பின்பு அதிக தொகையுடன் செலுத்த தயாரா என மறைமுகமாக லஞ்சம் கேட்டார்.  கடும் மன உளைச்சலுக்கு ஆளான  கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரி தனது குடும்பத்தாரை  அனைவரையும் வரவழைத்து கையில் பெட்ரோல் கேனுடன் வந்து  குடும்பத்துடன் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என கூறியுள்ளார்.  

எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் யார் புகார் அளித்தது என கேட்ட நிலையில் அதிகாரியின் மொபைல் போனில்  புகார் விவரம் குறித்தான தகவலை காட்ட அதில் 2வது முறையாக இந்த கடையில் சிக்கன் பக்கோடா வாங்கினேன். அங்கு  மோசமான கோழி இறைச்சி பயன்படுத்தப்படுவதை நான் கவனித்தேன், தயவுசெய்து தேவையான நடவடிக்கை எடுக்கவும் என இவ்வறாகவே புகார் அளித்து இருந்தது அந்த புகாரில்  பதிவாகியிருந்தது.    கடையில் சோதனை குறித்த ஆய்வறிக்கை தயார் செய்து அவற்றில் கையொப்பமிட கடையின் உரிமையாளர் தமிம் அன்சாரியிடம் கூறிய நிலையில் கையெழுத்து போட மறுத்த நிலையில் கடையின் சுவற்றில் அதனை ஒட்டிவிட்டு சென்றார்.
இந்த அதிகாரி  கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்த போது காஞ்சிபுரத்தில் SRB பிரியாணி கடையில் கண்துடைப்பிற்காக ஆய்வு நடத்திய மாவட்ட உணவு பாதுகாப்புதுறை மாவட்ட அலுவலர்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  மீது  துறை ரீதியாக நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு சமீபத்தில் தான் மீண்டும் அதாவது  கடந்த ஒரு  மாதத்திற்கு முன்னரே மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என்பதும்   குறிப்பிடதக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!