4 மாவட்டங்களில் கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை!

 

 தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகம் கேரளாவின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்  தென்மாவட்ட கடற்கரைகளுக்கு கடல் சீற்றத்துக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அலைஓசையுடன் அமைதியாக காணப்படும் கடல், எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில் ஏற்படுத்தும் பாதிப்பையே  `கள்ளக்கடல்' நிகழ்வு என்கின்றனர்.  கடந்த சில  வாரங்களுக்கு முன் இதேபோல தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கடல் சீற்றத்துக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு  கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களில் கடல் சீற்றத்துக்கான கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கன்னியாகுமரியில் கடல் அலை 2.3 மீட்டர் முதல் 2.6 மீட்டர் வரையும்,  ராமநாதபுரத்தில்  2.7 முதல் 3 மீட்டர் வரையிலும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் 2.4 முதல் 2.7 மீட்டர் வரையும் கடல் அலை எழும்பலாம் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  குறிப்பாக நாளை இரவு 11.30 மணி வரை இந்த எச்சரிக்கை தொடரும் எனவும் இந்திய கடல்சார் தகவல் மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதுபோன்ற கடல் சீற்ற நிகழ்வை பொருட்படுத்தாமல் கடலில் குளிக்கச் சென்ற சிலர் அலையில் சிக்கி உயிரிழந்ததை இந்திய கடல் சார் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!