இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ!
தமிழ்நாட்டில் இன்று 27.11.2024 புதன்கிழமை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று பார்க்கலாம். கனமழைக் காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னையில் இருந்து 720 கிலோமீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 520 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 8 கிலோமீட்டர் வடமேற்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்றும் அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி தமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தமிழகத்தில் விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!