படிக்க பிடிக்கலை... பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பள்ளிக்கு செல்லுமாறு தாயார் திட்டி வற்புறுத்தியதால் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஜக்கம்மாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமஜெயம். இவரது மகள் விஜயலட்சுமி (15). சாயர்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் விஜயலட்சுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு சரியாக படிப்பு வராத நிலையில், இனி பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று வீட்டில் கூறியதால் அவரது தாயார் திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் மனவேதனையடைந்த மாணவி விஜயலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏரல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.