undefined

ஓயாத மழை...  9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ஆன்லைன் வகுப்புக்கள் நடத்த தடை!

 
 இன்று சென்னை உட்பட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புயல் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் ஃபெங்கல் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் , ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்னர். அதே போன்று புதுவையிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து "ஃபெங்கல்" புயலாக நேற்று நவம்பர் 29ம் தேதி வலுப்பெற்றது. 

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே இன்று நவம்பர் 30ம் தேதி பிற்பகல் புயலாக கடக்கக்கூடும்.  புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் காற்று மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெங்கல் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு வகுப்புகளையோ, ஆன்லைன் வகுப்புகளையோ நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!