undefined

கண்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவன் பலி.. தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது சோகம்!

 

பழனி அருகே கண்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பழனி பெரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் யமுனா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இன்று தனது மகன் யோகேஷ் பாண்டியனை யமுனா பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். பழனி உடுமலை சாலையில் காரமடை அருகே சென்றபோது முன்னே சென்ற கண்டைனர் லாரியை இருசக்கர வாகனத்தில் யமுனா முந்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பக்கத்தில் மோதி கீழே விழுந்த நிலையில் சிறுவன் யோகேஷ் பாண்டியன் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பழனி நகர போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயுடன் பள்ளிக்குச் சென்ற சிறுவன் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!