undefined

மாணவர்களுக்கு வழங்கிய உதவிதொகை கையாடல்.. பள்ளி ஆசிரியை அதிரடியாக கைது!

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நெய்க்காரப்பட்டி. இங்கு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளியில் நெய்க்காரப்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இப்பள்ளியின் சார்பில் செயல்படும் விடுதியில் தங்கிப் படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில்  விடுதிக்கான கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பில் இருந்துவந்த விஜயா என்பவர் தற்போது அதேபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் இவர் தலைமை ஆசிரியையாக இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கிய உதவித் தொகையை கையாடல் செய்ததாக பள்ளி நிர்வாகம் சார்பில் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரில்  2010 ம் ஆண்டு முதல் 2020 ஆண்டு வரை பள்ளியில்  தலைமை ஆசிரியராக இருந்த போது சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரையில் விஜயா  முறைகேடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் புகாரைப் பெற்று விசாரணை நடத்திய போலீசார் ஆசிரியை விஜயா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆசிரியை விஜயாவை சிறையில் அடைத்தனர். ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதி உதவித்தொகையில் முறைகேடு செய்ததாக ஆசிரியை கைது செய்யப்பட்டது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை