undefined

’ஆன்லைனில் லீக்கான நடிகையின் ஆபாச காட்சி’.. தக்க பதிலடி கொடுத்த திவ்யா பிரபா!

 

மலையாள நடிகைகள் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, இந்தி நடிகை சாயா கதம் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘All We Imagine as Light’. இப்படம் இந்த ஆண்டு புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது. இவ்விழாவில் இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது மேலும் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்படம் சில சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. இப்படம் மலையாளம், ஹிந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை திவ்யா பிரபா நடித்த ஆபாச காட்சி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. இது குறித்து நடிகை திவ்யா பிரபா சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது, ​​கேரளாவில் உள்ள சில அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்பார்த்தேன். கசிந்த வீடியோவைப் பகிர்பவர்கள் வெறும் 10% பேர்தான்.

அவர்களின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. படத்திற்கு ஒப்புதல் அளித்த மத்திய குழுவில் மலையாளிகள் இருந்தனர். ஒரு நடிகையாக எனக்கு பிடித்த கதைகளில் நடிக்கிறேன். "இந்தப் படத்திலும் அப்படித்தான் நடித்தேன். புகழுக்காக ஆபாச காட்சிகளில் நடிக்கிறேன் என்று சிலர் என்னை விமர்சிக்கிறார்கள். பல விருதுகள் வாங்கியுள்ளேன். விமர்சன ரீதியாகப் பாராட்டும் படங்களிலும் நடித்துள்ளேன். அதனால் ஆபாசமாக நடித்து புகழ் அடைய வேண்டும் என்ற  சூழ்நிலையில் நான் இல்லை ‘’ என்று பதிலளித்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!