undefined

 சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்: டிஐஜி மூர்த்தி உத்தரவு!

 
 

சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வருபவர் ஜேசுராஜசேகரன். இவர் இதற்கு முன்பு நாகர்கோவில் புதுக்கடை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

அப்போது அங்கு சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக எஸ்பி விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!