undefined

25 பைசாவுக்கு ஒரு புடவை!! அலைமோதிய   பெண்கள் கூட்டம்!!

 

இன்று திண்டுக்கல் நாகல் நகரில்  தனியாருக்கு சொந்தமான துணிக்கடை திறப்பு விழா நடைபெற்றது. காலை முதலே இக்கடையில் கூட்டம் அலைமோதியது. நேற்றைய தினம் புதிய கடைத்திறப்பு விழாவையொட்டி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில்   பழைய 25 பைசா நாணயம் முதலில் கொண்டு வரக்கூடிய 500 பொது மக்களுக்கு காலை 10 மணிக்கு  புடவை இலவசம் என அறிவிக்கப்பட்டு  இருந்தது.  

இது குறித்த   போஸ்டர்கள் நாகல்நகர், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்த மக்கள் அதிகாலை முதலே கடையின் முன்பு குவியத் தொடங்கினர்.  


 பொதுமக்கள் வரிசையாக நின்று புடவை வாங்கிச் செல்ல கட்டைகள் மூலம் பிரித்து  கட்டப்பட்டிருந்தது.  அடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால் காலை 8 மணி முதலே  பொதுமக்களிடம் இருந்து பழைய 25 பைசா நாணயத்தை வாங்கிக் கொண்டு முதலில் வந்த 500 நபர்களுக்கு புதிய புடவை ஒன்று வழங்கப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை