undefined

 கதறும் சாம்சங் நிறுவனம்... தொழிலாளர்கள் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு!

 
 


தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர்கள் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்திருந்தனர்.

அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில், சாம்சங் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாகவும், தங்கள்  நிறுவன பெயரை பயன்படுத்தாமல் தொழிற்சங்கத்தை தொடங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.  

அப்போது தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை என்றும் கொரியாவில் கூட சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாம்சங் நிறுவன இடையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு  வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!